அடுத்த கட்ட போராட்டமும் ஆயுத போராட்டமாக இருக்கலாம் : காசி ஆனந்தன்

75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. ஈழமண் பறிபோனது. தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்துவிட்டோம். அந்த மண்ணை இழந்தாலும் விடமாட்டோம். ஆயுதப்போர் தொடங்கும், இவ்வாறு காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை ஜெயின் பேலஸில் தமிழர் மீட்சிப்படையில் இருந்த முத்துக்குமாருக்கும், புதுக்கோட்டை திராவிடர் கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் கரு.காளிமுத்து மகள் மாதரசிக்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய போதே காசி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இது வரை ஈழம் மூன்று கட்ட போர்களை சந்தித்திருக்கிறது.

முதற்கட்ட போர், பேச்சுவார்த்தை, இரண்டாம் கட்ட போர் அறப்போராட்டம், மூன்றாம் கட்ட போர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம், நான்காவது போரும் ஆயுதப்போராட்டமாக அமையலாம்.

ஆயுதப் போராட்டம்தான் எங்கள் தீர்வு. போர்க்குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். போராட்டம் தொடரும்” என்று காசி ஆனந்தன் தெரிவித்தார்.



உங்கள் கருத்து